தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதில், சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், 22 பந்துகளில் 7 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
இதனால், ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலியை பின்னுக்குத் தள்ளி அவர் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். 673 புள்ளிகளுடன் இருக்கும் கோலி 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய வீரர்களை பொறுத்தவரையில் இப்பட்டியலில் கே.எல். ராகுல் இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா 11ஆவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
இதில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதேசமயம், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு அரைசதம் உட்பட 131 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக், 10 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்த வீரனுக்காகதான் உலகமே ஏங்குகிறது! HBD AB De Villiers