ETV Bharat / sports

கிரிக்கெட்டில் இந்தியாதான் பாஸ் - சோயப் அக்தர் - இந்தியா - வங்கதேசம் டி20 போட்டி

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சோயப் அக்தர் ஓய்வுபெற்றாலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் ஆட்டத்திறன் குறித்து தனது கருத்தை அவ்வப்போது தெரிவித்து இணையதளத்தில்  எப்போதும் பிஸியாக இருப்பவர்.

Indian cricket team
author img

By

Published : Nov 12, 2019, 3:18 PM IST

லாகூர்: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சோயப் அக்தரும் இணைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இவர் ஓய்வுபெற்றாலும், அவ்வப்போது இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் ஆட்டத்திறன் குறித்து தனது கருத்து தெரிவித்து இணையதளத்தில் பிசியாக உள்ளார். தற்போது இந்திய அணியின் ஆட்டத்திறன் குறித்து தனது யூ ட்யூப் சேனலில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அதில், "முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் நல்ல கம்பேக் தந்து தொடரை வென்றுள்ளது. இதன்மூலம், கிரிக்கெட்டில் யார் பாஸ் என்பதை நிரூபித்துள்ளது. முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இரு அணிகள் வென்றதால் மூன்றாவது டி20 போட்டி பரபரப்பாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது.

இருப்பினும், இந்தத் தொடரில் போராடிய வங்கதேச அணிக்கு எனது வாழ்த்துகள். வங்கதேச அணி சாதாரண அணி கிடையாது. அந்த அணி மற்ற அணிகளிடம் மோசமான தோல்விகளைச் சந்திக்காது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், தீபக் சாஹர் பந்தை வேகமாகவும் மெதுவாகவும் வீசி அசத்துகிறார். ஹாட்ரிக் விக்கெட் எடுத்து தனது திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அக்தர் அந்தக் காணொலியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடர் முடிந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் இந்தூரில் தொடங்கவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.