ETV Bharat / sports

உலகக்கோப்பைக்குப் பின் இந்தியாவிற்குக் கிடைத்த முதல் ஆறுதல் வெற்றி! - கோலி

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்திய வீரர்கள்
author img

By

Published : Aug 3, 2019, 11:50 PM IST

உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி ஃப்ளோரிடாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜான் கேம்பெலும் லெவிஸும் ரன் ஏதும் எடுக்காமலே நடையைக் கட்டினர். அதன்பின் வந்த பூரான் அதிரடியாக ஆடினாலும் 20 ரன்களில் அறிமுக பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியிடம் வீழ்ந்தார்.

பொல்லார்ட் மட்டும் ஒரு முனையில் நின்று போராடிக் கொண்டிருந்தார். ஆனால், மறுமுனையில் அவருக்கு யாரும் ஒத்துழைக்கவில்லை. பொறுப்புடன் விளையாடிய பொல்லார்ட் 49 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. நவ்தீப் சைனி தன்னுடைய அறிமுக போட்டியிலேயே சிறப்பாகப் பந்துவீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பொல்லார்ட்
பொல்லார்ட்

96 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆட வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். நன்றாக ஆடிய ரோஹித் சர்மா 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் பந்த் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.

சைனி
சைனி

கேப்டன் கோலி மற்றும் மனிஷ் பாண்டே 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 17.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. வாஷிங்டன் சுந்தர் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறிய இந்திய அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சுனில் நரேன், காட்ரெல், கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Intro:Body:

INDvWI: Second Innings

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.