ETV Bharat / sports

#INDvsRSA2019: புதிய கேப்டனுடன் தென்னாப்பிரிக்கா... வெற்றிப் பாதையை தக்கவைக்குமா இந்தியா? - quiton d cock

தர்மசாலா: இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

#INDvsRSA2019
author img

By

Published : Sep 15, 2019, 2:26 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் முதலாவது டி20 போட்டி இன்று இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் நடைபெறவுளது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் இவ்விரு அணிகளும் முதன்முறையாக மோதவுள்ளன. இந்திய அணியைப் பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை முழுவதுமாக கைப்பற்றி வெற்றிப் பாதையில் பயணிக்கின்றது.

தென்னாப்பிரிக்க அணி நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடருக்குப் பின் தனது முதல் போட்டியில் புதிய கேப்டனான குவிண்டன் டி காக் தலைமையில் பங்கேற்கின்றது.

இந்த இரு அணிகளும் இதுவரை 14 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 முறையும், தென்னாப்பிரிக்கா 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பியுள்ளார். மேலும் பார்மில் இருக்கும் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்தப் போட்டியிலும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செயல்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இதனால் வலிமை மிகுந்த படையுடன் இன்றையப் போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தமட்டில் பாப் டு பிளசிஸ் காயம் காரணமாக டி20 தொடரில் பங்கேற்காத நிலையில் புதிதாக கேப்டன் பொறுப்பில் உள்ள குவிண்டன் டி காக் அணியின் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உத்தேச அணி விவரம்:
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கே), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சஹார், நவ்தீப் சைனி.

தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான்டெர் டௌசன், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜூனியர் தலா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.

இன்றையா போட்டி நடக்கும் தர்மசாலாவில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.