உலககோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. டாப் ஆர்டரில் களமிறங்கிய கருணரத்னே, குசால் பெரேரா, பெர்னாண்டோ மற்றும் மெண்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது.
கடினமான சூழலில் ஆட வந்த மேத்யூஸ் மற்றும் திரிமன்னே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியின் ரன்னை உயர்த்தினர். திரிமன்னே அரைசதம் அடித்து வெளியேறினார். நன்றாக விளையாடிய மேத்யூஸ் சதமடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்தது.
சிக்கனமாக பந்து வீசிய பும்ரா 37 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்களை எடுத்தார். புவனேஷ்குமார்,ஜடேஜா, பாண்ட்யா மற்றும் குல்தீப் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். எளிய இலக்கை நோக்கி ஆட வந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறினர்.
ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 5 சதமடித்து உலகசாதனை புரிந்தார். ராகுலும் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து அடித்த 183 ரன்களே இது வரை நடந்த உலகக்கோப்பையில் அதிகபட்ச ஓப்பனிங் ரன்களாகும். முடிவில் 43.3 ஒவரில் இலக்கை எட்டிப்பிடித்து இந்தியா எளிதாக வென்றது. கோலி 34 ரன்களும் பாண்ட்யா 7 ரன்களும் அடித்தனர்.ஆறுதல் வெற்றி கூட பெற முடியாமல் இலங்கை அணி பரிதாபமாக தொடரை விட்டு வெளியிறியுள்ளது.