இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, அகர்வால், ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர்களாக டீன் எல்கர் - மார்க்ரம் களமிறங்கினர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் என்பதால் இந்திய அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ், தான் வீசிய முதல் ஓவரிலேயே மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
அதையடுத்து எல்கர் - டி பிரின் (de bruyn) இணை ஜோடி சேர்ந்தது. மேலும் விக்கெட்டுகள் இழந்துவிடக் கூடாது என நிதானமாக பொறுப்புடன் ஆடிய எல்கர் 6 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் போல்டாகி வெளியேறினார். 13 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் வெளியேற, தொடர்ந்து களமிறங்கிய பவுமா, ஷமியின் துல்லியமான பந்துவீச்சில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து டி பிரின் - அன்ரிச் ஆகியோர் சிறிது நேரம் ஆடினார். அதையடுத்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்கலாமே: 'பாசத்துல...இவன் நம்மளையே மிஞ்சிடுவான் போலயே' - ரசிகரால் பூரிப்படைந்த கோலி!