INDvsRSA: இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. இதன் முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், கடைசிப் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்றுவருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா, ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்திருந்தார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தபோது, இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து தொடர்ந்த மூன்றாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஜுபைர் ஹம்சா, பவுமா இணை அணியினர் ரன் கணக்கை உயர்த்தத் தொடங்கினர்.
சிறப்பாக விளையாடிய ஹம்சா 56 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து 62 ரன்கள் அடித்திருந்த நிலையில், அவர் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய டெம்பா பவுமா 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நதீம் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
-
All out!
— ICC (@ICC) October 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
South Africa are finished off for 162, the wickets shared across the Indian bowlers.
With a lead of 335, will Kohli enforce the follow-on?#INDvSA | LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/pmPwCa3mWT
">All out!
— ICC (@ICC) October 21, 2019
South Africa are finished off for 162, the wickets shared across the Indian bowlers.
With a lead of 335, will Kohli enforce the follow-on?#INDvSA | LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/pmPwCa3mWTAll out!
— ICC (@ICC) October 21, 2019
South Africa are finished off for 162, the wickets shared across the Indian bowlers.
With a lead of 335, will Kohli enforce the follow-on?#INDvSA | LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/pmPwCa3mWT
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் சோபிக்காததால் அந்த அணி 56.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா, நதீம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபாலே-ஆன் கொடுத்து தென் ஆப்பிரிக்க அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார். தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தற்போதுவரை 2 விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறிவருகிறது.
இதையும் படிங்க: டாப் ஆர்டரிடம் சீறிய இந்திய பவுலர்கள் டெய்லண்டர்களிடம் சொதப்பல்!