இடையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதன்மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த இந்திய அணியின் வெற்றிக்கும் நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்தது. கோலி, ரஹானே, புஜாரா என சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியிலிருந்தும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 190 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது.
இந்நிலையில், இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில், "இப்போட்டியில் நாங்கள் நியூசிலாந்துக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த காலத்தில் நாங்கள் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறோம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் எங்களது பேட்டிங் படுமோசமாக இருந்ததே தோல்விக்கான முக்கிய காரணம் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதை ஏற்றுக்கொள்வதில் எந்தவித தயக்கமும் கிடையாது. மோசமாக விளையாடினோம் என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற மனநிலைவரும்" என்றார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 29ஆம் தேதி கிறிஸ்ட் சர்ச்சிலுள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: சாதனைகளின் களஞ்சியமாக விளங்கும் மொடீரா மைதானம்!