ETV Bharat / sports

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: போல்ட், ஜேமிசன், அஜாஸ் படேல் நியூசி., அணியில் சேர்ப்பு! - வில்லியம்சன்

இந்தியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள 13 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

india-vs-new-zealand-test-series-trent-boult-returns-jamieson-earns-maiden-call-up-for-nz

author img

By

Published : Feb 17, 2020, 4:17 PM IST

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி பின் தங்கியுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றிபெறவ் வேண்டிய கட்டாயம் நியூசிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தத் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஃபெர்குசனுக்கு பதிலாக ஆஸ்திரேலியத் தொடரில் சேர்க்கப்பட்ட கைல் ஜேமிசன், அஜாஸ் படேல், ஆல் ரவுண்டர் டேரில் மிட்சல், காயம் காரணமாக ஓய்வில் இருந்த ட்ரென்ட் போல்ட் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட்

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் பேசுகையில், '' கள சூழல், பிட்ச்சின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 13 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீண்ட நாள்களுக்கு பிறகு போல்ட் அணிக்கு திரும்பியுள்ளது புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

கைல் ஜேமிசனைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். அஜாஸ் படேலை மீண்டும் அணிக்கு வரவேற்கிறோம். வெலிங்டன் மைதானத்தில் ஆல் ரவுண்டர் டேரில் மிட்சல் அசத்துவார் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

நியூசிலாந்து அணி விவரம்: வில்லியம்சன் (கேப்டன்), டாம் ப்ளெண்டல், ட்ரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்சல், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுதி, ராஸ் டெய்லர், வாக்னர், வாட்லிங்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.