ETV Bharat / sports

'பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகப்பெரிய அச்சுறுத்தல்தான்' - வில்லியம்சன் - இந்தியா vs நியூசிலாந்து

பும்ராவின் கைகளில் பந்து இருப்பது பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலான விஷயம்தான் என நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

india-vs-new-zealand-bumrah-a-threat-every-time-he-comes-in-to-bowl-kane-williamson

author img

By

Published : Feb 12, 2020, 2:42 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. 30 வருடங்களுக்குப் பிறகு கோலி தலைமையில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. இத்தனை நாள்களாக இந்திய அணிக்குள் இருந்த மிடில் ஆர்சர் பிரச்னை இந்தத் தொடரில் சரி செய்யப்பட்டும் தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இதற்கு மிக முக்கியக் காரணம் இந்திய அணியின் மேட்ச் வின்னர்களான கோலி, பும்ரா ஆகியோர் சரியாக செயல்படாதது என அனைத்துத் தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கோலிக்கு ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் பிரச்னை மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டேவருகிறது. மறுபக்கம் வேகப்பந்துவீச்சில் பவுன்சர், யார்க்கர், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ஸ்லோ - பால் என அனைத்து விதமான பந்துகளையும் துல்லியமாக வீசும் பும்ரா மூன்று போட்டிகளில் ஆடி ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாதது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

வில்லியம்சன்
வில்லியம்சன்

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேசுகையில், ''அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பும்ரா உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பது எங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அவருடைய கைகளில் பந்து இருந்தால், நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்தான். அவர் விக்கெட் வீழ்த்தாதது பெரிய விஷயமே இல்லை. இன்னும் சில நாள்களில் அவர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பிவிடுவார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்தத் தொடரில் பும்ரா சிறப்பாகவே பந்துவீசினார்'' என்றார்.

இந்த வீரர்களும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ஃபார்மிற்கு திரும்புவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பறக்கத் தெரியாத கிவிகளை பறக்க வைத்த வில்லியம்சன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.