இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற இருந்தது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தார்.
ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக மழை பெய்தது. இந்த மழையால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் காணப்பட்டன. இதனால் நடுவர்கள் பிட்ச்சின் தன்மையை மூன்று மணி நேரத்திற்கு பின் பறிசோதித்தபோதும், ஈரப்பதம் குறையாததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
![பிட்சி-ன் தன்மையைப் பறிசோதித்த நடுவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5606294_umpires.jpg)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி நாளை மறுநாள் இந்தூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், மற்ற இரண்டு போட்டிகளில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் அடுத்தப் போட்டியில் கவனமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆறு பந்தில் ஆறு சிக்சர்! 'யுவி'யை கண்முன் நிறுத்திய 'கிவி' வீரர்!