இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மூன்று ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
அதன் பின் தவானுடன் ஜோடி சேர்ந்த ராகுல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின் தவான் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ராகுலுடன் இணைந்து ஸ்ரேயாஸ் ஐயர் எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ராகுல், சர்வதேச டி20 அரங்கில் தனது ஆறாவது அரை சதத்தை கடந்து அசத்தினார். அதன் பின் 35 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அல் அமின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் பந்துவீச்சாளர்களுக்கு கருணை காட்டாத ஸ்ரேயாஸ் ஐயர் ஹொசைன் வீசிய 14ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவீட்டு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். பின் 32 பந்துகளில் ஐந்து சிக்சர், மூன்று பவுண்டரிகளுடன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் மனீஷ் பாண்டே, ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய மனீஷ் பாண்டே 22 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களையும், கேஎல் ராகுல் 52 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி சார்பில் இஸ்லாம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
Innings Break!
— BCCI (@BCCI) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
A fluent 52 from @klrahul11 followed by a quick-fire 62 by @ShreyasIyer15 propel #TeamIndia's total to 174/5.
Live - https://t.co/VZl9R87hn5 #INDvBAN pic.twitter.com/LwQXeHaUTz
">Innings Break!
— BCCI (@BCCI) November 10, 2019
A fluent 52 from @klrahul11 followed by a quick-fire 62 by @ShreyasIyer15 propel #TeamIndia's total to 174/5.
Live - https://t.co/VZl9R87hn5 #INDvBAN pic.twitter.com/LwQXeHaUTzInnings Break!
— BCCI (@BCCI) November 10, 2019
A fluent 52 from @klrahul11 followed by a quick-fire 62 by @ShreyasIyer15 propel #TeamIndia's total to 174/5.
Live - https://t.co/VZl9R87hn5 #INDvBAN pic.twitter.com/LwQXeHaUTz
இதனைத் தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது வங்க தேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படிங்க:கேப்-டவுன் பிளிட்ஸ் அணியை திணறவைத்த பார்ல் ராக்ஸ் அணி அபார வெற்றி!