ஐசிசியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். 2018ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தவகையில், 13ஆவது அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை, அனைத்து இந்திய ஜூனியர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரயம் கார்க் இந்திய அணியின் கேப்டனாக நியக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில், நடப்பு சாம்பியன் இந்திய அணி ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு குரூப் பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் லெக் சுற்றுக்கு முன்னேறும்.
- குரூப் ஏ: இந்கியா, ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை
- குரூப் பி: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நைஜீரியா, வெஸ்ட் இண்டீஸ்
- குரூப் சி: வங்கதேசம், பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே
- குரூப் டி: ஆப்கானிஸ்தான், கனடா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்
இந்திய அணி: ப்ரியம் கார்க் (கேப்டன்), யஷஸ்வி ஜெஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, துருவ் சந்த் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), சஷ்வத் ரவாத், திவ்யான்ஷ் ஜோஷி, ரவி பிஷ்னோய், அகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அன்கோலேக்கர், குமார், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சுஷாந்த் மிஷ்ரா, வித்யாதர் படில்
-
Four-time winner India announce U19 Cricket World Cup squad. Priyam Garg to lead the side. pic.twitter.com/VEIPxe2a2n
— BCCI (@BCCI) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Four-time winner India announce U19 Cricket World Cup squad. Priyam Garg to lead the side. pic.twitter.com/VEIPxe2a2n
— BCCI (@BCCI) December 2, 2019Four-time winner India announce U19 Cricket World Cup squad. Priyam Garg to lead the side. pic.twitter.com/VEIPxe2a2n
— BCCI (@BCCI) December 2, 2019
நான்கு முறை 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி மீண்டும் ஒரு முறை இந்தக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.