ETV Bharat / sports

#IndvsWI2019: டெஸ்ட் தொடரையும் கைபற்றியது இந்திய அணி!

author img

By

Published : Sep 3, 2019, 8:42 AM IST

ஆன்டிகுவா: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

india beat west indies

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஏற்கனவே டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்றிருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஹனுமா விஹாரி, விராட் கோலி, இஷாந்த் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. இதில் ஹனுமா விஹாரி 111 ரன்களும், கோலி 76 ரன்களும், இஷாந்த் சர்மா 57 ரன்களையும் குவித்தனர்.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பும்ரா

அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. இதில் இந்தியாவின் வேகபந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ரா ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின் 299 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே தொடங்கியது. இந்திய அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், கேப்டன் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாத ரஹானே இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமடித்து அசத்தினார். இதில் ரஹானே 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 64 ரன்களை குவித்தார். மேலும் மற்றொரு வீரரான ஹனுமா விஹாரி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 8 பவுண்டரிகள் உட்பட 53 ரன்களை சேர்த்து அசத்தினார்.

களத்தில் ரஹானே மற்றும் விஹாரி
களத்தில் ரஹானே மற்றும் விஹாரி

இந்திய அணி 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இதன் மூலம் 467 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜான் கேம்பெல், கிராக் பிராத்வெயிட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் களமிறங்கிய ஷமாரஹ் புரூக்ஸ் நிலைத்து ஆடி அரை சதமடிக்க மறுமுனையில் சீரான இடைவேளியில் விக்கேடுகள் சரியத்தொடங்கின.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது ஷமி

அதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷமாரஹ் புரூக்ஸ் 50 ரன்களையும், ஹொல்டர் 39 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டெஸ்ட் தொடருக்கான கோப்பையுடன் இந்திய கேப்டன் விராட் கோலி

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதமும் அடித்த ஹனுமா விஹாரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது சொந்த மண்ணில் எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

india vs west indies cricket match update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.