ETV Bharat / sports

உலகக்கோப்பை ரீவைண்ட்: 28 வருட ஏக்கத்தை துடைத்தெறிந்த தோனி..!

28 வருடங்களுக்குப் பிறகு 2011-ல் தான் இந்திய அணி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. ரசிகர்களால் மறக்க முடியாத இந்நிகழ்வு நடந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை குறித்த ஓர் சிறப்பு பார்வை இதோ...

author img

By

Published : Apr 2, 2019, 5:46 PM IST

sachin

கிரிக்கெட்டையே மதமாக பார்க்கும் இந்திய ரசிகர்களுக்கும் சரி, இந்திய கிரிக்கெட் அணிக்கும சரி ஏப்ரல் 2, 2011 மறக்க முடியாத மிகவும் முக்கியமான நாளாகும். 28 வருடங்களுக்குப் பிறகு, உலகக் கோப்பை ஒருநாள் தொடரைஇந்திய அணிகைப்பற்றியதுதான் அதற்கு காரணம்.

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதால், கிரிக்கெட் என்னும் விளையாட்டிற்கு இந்தியாவில் மவுசு அதிகமானது. இந்திய அணி மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வெல்லும் என்ற கனவை ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினர்.

world cup
1983 உலகக்கோப்பையை முதன் முறையாக வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ்

ஆனால் 1987, 1992, 1996,1999, 2003,2007 என ஆறு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. 1987, 1996 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது, அதன்பின் 2003-ல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது என்பது போல், இந்திய அணி இறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை நழுவவிட்டது.

இதனிடையே, கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைப் படைத்த சச்சினுக்கு, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஏக்கம் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. இதனால், சச்சினுக்காகவும், அணியை நம்பி இருக்கும் ரசிகர்களுக்காகவும் இம்முறை உலகக் கோப்பையை நாங்கள் வெல்வோம் என இந்திய அணி 2011 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக உறுதியளித்தனர்.

2011-ல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தியது. அதுவரை தொடரை நடத்திய நாடு உலகக் கோப்பையை கைபற்றாது என்ற பிம்பமும் இருந்தது.

14 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தும், இறுதிச் சுற்றில் இலங்கை அணியை சந்தித்தது.

world cup
சச்சின்

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுடன் மோதிவிட்டு, இந்தியா, இலங்கையை எதிர்கொண்டதால், இறுதிப் போட்டி பரபரப்பாக இருக்காது என நினைத்தனர் ஒரு சில ரசிகர்கள். ஆனால், இந்தியா சாதாரண போட்டியில் ஆடினாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. உலகக் கோப்பை என்றதும் சொல்லவா வேண்டும்.

இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் போடுவதற்காக இந்திய அணியின் கேப்டன் தோனியும், இலங்கை அணியின் கேப்டன் சங்ககராவும் களத்திற்குச் சென்றனர். டாஸில் இந்திய அணிதான் வெற்றிபெற்றது, ஆனால் சங்ககரா சொன்னது நடுவருக்கு சரியாக கேட்காததால், டாஸ் மீண்டும் போடப்பட்டது. இதில், இலங்கை அணி வெற்றிபெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

இதனால், ரசிகர்கள் இலங்கை அணி போங்காட்டம் ஆடுகிறார்கள் என்றெல்லாம் விமர்சித்தனர். அதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற்றுதான் அதற்கு முக்கிய காரணம்.

இதைத்தொடர்ந்து, இலங்கை தொடக்க வீரர் உபுல் தராங்காவை 2 ரன்களுக்கு நடையைக் கட்ட செய்தார் ஜாகிர் கான். தில்ஷன், சங்ககரா, சமரவீரா, போன்ற பேட்ஸ்மேன்கள் ஆவுட் ஆனாலும், ஜெயவர்தனே ஆணி அடித்தது போல் மறுமுனையில் அசைக்க முடியாத வகையில் பேட்டிங் செய்து வந்தார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணியிடம் இருந்த சுறுசுறுப்பு, ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் மங்கியது. ஜெயவர்தனே சதம் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரை வீச வந்த ஜாகிர் கான் 18 ரன்களை அள்ளிக்கொடுத்தார். ஆட்டத்தின் கடைசி பந்தை இலங்கை வீரர் பெரேரா சிக்சர் அடித்து முடித்தார். இதனால், இலங்கை அணி 50 ஓவர்களில் 274 ரன்களை குவித்தது.

275 என்பது கடின இலக்குதான். அதுவும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 275 ரன்களை எடுப்பதெல்லாம் அத்தி பூத்தாற் போன்ற நிகழ்வாகும். ஆனால், இந்திய அணி மீது ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையோடு இருந்தனர். சச்சினின் சொந்த மைதானம் என்பதால், அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.

வழக்கம்போல் தொடக்க வீரர்களாகசேவாக்கும், சச்சினும்களமிறங்கினார்கள். இவ்விரு வீரர்கள் இலங்கை அணியை பார்த்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால், சேவாக் மலிங்கா வீசிய இரண்டாவது பந்திலேயே அவுட், ரசிகர்கள் வாயடைத்து இருந்தனர். அதன் பின், கம்பீருடன் ஜோடி சேர்ந்த சச்சின், எந்த வித அழுத்தமும் இல்லாமல், நம்பிக்கையுடன் ஆடினார். தெர்ட் மேன் திசையில் ஒரு பவுண்டரி பின் ஸ்டைர்ட் டிரைவில் ஒரு பவுண்டரி அடித்தார்.

world cup
சச்சின்

மீண்டும் மலிங்கா என்பவர், சச்சினுக்கு எமன் ரூபத்தில் வந்தார். 14 பந்துகளில் 18 ரன்கள் அடித்த சச்சினையும் அவர் வெளியேற்றினார். இதனால், இந்திய ரசிகர்கள் சோகக்கடலில் மூழ்கினர். இலங்கை அணியின் ரசிகர்களோ உற்சாக கடலில் மிதந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களை மட்டுமே எடுத்தது. போட்டி முடிந்தது, மீண்டும் ஓர் 2003 உலகக் கோப்பை தொடரில் சொதப்பியதைப் போல இம்முறையும் சொதப்புவார்களோ என்ற எண்ணம் இந்திய ரசிகர்களுக்கு ஆரம்பிக்கத் தொடங்கியது.

அதன் பின், கோலி - கம்பீர் இணை ஓரளவிற்கு இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடித்தது. செட் பேட்ஸ்மேனாக இருந்த கோலியை தில்ஷன் அவுட் செய்தார். மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது, இந்தியா. 114 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், யுவராஜ் சிங் களத்திற்கு வருவார் என்று பார்த்தால், தோனி ஐந்தாவது வரிசையில் களம் புகுந்தார். அவரது வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் தோனி ஐந்தாவது வரிசையில் இறங்கினார் என்பதை இப்போது யாருக்கும் விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.

தோனி - கம்பீர் இருவரும் சேர்ந்து இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர் என்றே கூறலாம். 1,2 என்ற ரன்களை எடுத்துக் கொண்டே இருந்தனர். அவ்வபோது பவுண்டரிகளையும் விளாசினர். அவர்கள் ஆடிய விதம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பெறச் செய்தது. வெற்றிக்கு தேவைப்படும் ரன்களும் குறையத் தொடங்கியது. இதனால், சோகத்தில் இருந்த இந்திய ரசிகர்களின் முகம் மாறியது, உற்சாகத்தில் இருந்த இலங்கை ரசிகர்களின் முகம் வாடத்தொடங்கியது.

world cup
கம்பீர்

இருப்பினும் போட்டியில் பரபரப்பிற்கு மட்டும் பஞ்சமில்லாமல் ஓவர்கள் நகர்ந்துகொண்டிருந்தது. உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அல்லவா, ஒருக்கட்டத்தில் இந்திய அணியின் வெற்றி உறுதிச் செய்யப்பட்ட நிலையில், கவுதம் கம்பீர் 97 ரன்களில் அவுட் ஆனார். தனது வாழ்நாளில் அவர் எவ்வளவு ரன்களை விளாசினாலும், இந்த 97 ரன்கள் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எப்போதுமே ஸ்பெஷல்தான்.

பின்னர் இந்திய அணியின் வெற்றிக்கு 52 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்ட போது, தோனியுடன் ஜோடி சேர்ந்தார் யுவி. இதற்கிடையே, தோனியும் அரைசதம் விளாசினார். யுவராஜ் சிங், தோனி இருவரும் பவுண்டரிகளை அடித்து, இந்திய அணியை வெற்றிப்பெற வைப்பதில் குறியாக இருந்தனர். ரசிகர்களும் தங்களது கனவு நிறைவேறப்போவதை கொண்டாட ஆயுத்தமாக இருந்தனர்.

world cup
தோனி

கடைசி 11 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது, தோனி குலசேகராவின் பந்தை லாங் ஆன் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஒட்டுமொத்த மைதானம் மட்டுமின்றி, நாடே அதிர்ந்தது. (Dhoni finished the things off in style magnificent strike into the crowd, India lifted the worldCup after 28 years, the party starts in the dressing room, and the Indian Captain who has been magnificent in the night of the finals) என்று ரவி சாஸ்திரியின் கமெண்ட்ரி மனப்பாடப் பாடல் போல் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது.

79 பந்துகளில் தோனி 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 91 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். அதுவரை இந்த தொடரில் பெரிதும் சோபிக்காத தோனி, இறுதிப் போட்டியில் 91 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய வீரர்களின் ஓய்வறையில் மட்டுமில்லாமல் இந்தியா நாடே கொண்டாட்டத்தால் கலைகட்டியது. இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கால ஏக்கம் நிறைவேறிய நாள். சச்சினின் வாழ்க்கையில் எதற்காக ஏங்கினாரோ அது கிடைத்த நாள். வெற்றிபெற்றதும் ஒரு குழந்தைபோல் சச்சின் ஓடி வந்தது ரசிகர்களின் வாழ்நாளில் என்றும் மறக்காது.

world cup
உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் யுவி - தோனி

உலகக்கோப்பையை சச்சினுக்காக வெல்வோம் என யுவராஜ் தொடங்கி இந்திய வீரர்கள் கொடுத்த உறுதியைக் காப்பாற்றினார். வெற்றிக்கு பின்னர் சச்சினை மும்பை மைதானம் முழுக்க தோளில் சுமந்து வலம் வருவார்கள் இந்திய அணியினர். அப்போது கோலி பேசுகையில், கடந்த 24 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டை தன் தோளில் சுமந்தவரை தற்போது நாங்கள் சுமக்கிறோம் என்பார். அதுநாள் வரை, உலகக்கோப்பையை நடத்தும் நாடு வெற்றிபெறாது என்ற நம்பிக்கையை தகர்த்து எறிந்தது இந்திய அணி. ஹர்பஜன், ஸ்ரீசாந்த், ஜாகீர் கான், யுவி, சேவாக், கம்பீர் என இந்திய வீரர்கள் மைதானத்திலேயே ஆனந்த கண்ணீர் விட்டனர்.

world cup
சச்சினை இந்திய வீரர்கள் கொண்டாடியபோது

அந்த வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், நான் சாகும் தருவாயிலும் தோனி அடித்த சிக்ஸரை நினைத்துக்கொள்வேன் என ஆனந்தமாகக் கூறினார். 1983 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் கபில் தேவ், உலகக்கோப்பை குறித்து தொலைக்காட்சியில் பேசுகையிலேயே ஆனந்த கண்ணீர் வடிப்பார். அந்த உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் மிகவும் எமோஷனலானத் தருணம் தான். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தைத் தாண்டி இந்திய அணியும் தன் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. இந்த தருணத்திலிருந்துதான், இந்த நாளை இந்திய ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது. இந்தியா உலகக்கோப்பையை வென்றதை ரசிகர்கள் தெரு முழுக்க தேசியக் கொடியோடு சுற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் இந்தியாவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு அல்ல. இந்தியாவை பொறுத்தவரை அது ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு உலகக்கோப்பை எண்ணும் மகுடத்தை இரண்டாவது முறையாக வென்ற இந்த நாளை என்றும் மறக்க முடியாது.

world cup
உலகக்கோபையை வென்ற இந்திய அணி

Intro:Body:

Ind wins world cup this day on 2011

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.