இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 89, பொல்லார்ட் 74 ரன்களை எடுத்தனர்.
இதனிடையே, தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷாய் ஹோப் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் வேகமாக 3,000 ரன்களை அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால், ஜாம்பவான் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனை முறியடிக்கப்பட்டது. விவியன் ரிச்சர்ட்ஸ் இச்சாதனையை படைக்க 69 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்ட நிலையில், ஹோப் தனது 67ஆவது இன்னிங்ஸில் இதனை எட்டியுள்ளார்.
-
3000 ODI runs for Shai Hope (35*), become the fastest batsman from West Indies to get to the mark (67 innings).#INDvWI pic.twitter.com/YFRlU2TYkl
— Doordarshan Sports (@ddsportschannel) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">3000 ODI runs for Shai Hope (35*), become the fastest batsman from West Indies to get to the mark (67 innings).#INDvWI pic.twitter.com/YFRlU2TYkl
— Doordarshan Sports (@ddsportschannel) December 22, 20193000 ODI runs for Shai Hope (35*), become the fastest batsman from West Indies to get to the mark (67 innings).#INDvWI pic.twitter.com/YFRlU2TYkl
— Doordarshan Sports (@ddsportschannel) December 22, 2019
இதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் வேகமாக 3,000 ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆம்லாவுக்கு அடுத்தபடியாக இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஹோப், நடப்பு ஆண்டில் 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, இதுவரை 1,345 ரன்களை எடுத்துள்ளார்.
இதன் மூலம், ஒரு ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக ரன்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நூலளவில் தவறவிட்டார். 1993இல் லாரா 1,349 ரன்கள் எடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 3000 ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியல்:
- ஹசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா) - 57 இன்னிங்ஸ்
- ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) - 67 இன்னிங்ஸ்
- பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 68 இன்னிங்ஸ்
- விவயன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 69 இன்னிங்ஸ்
இதையும் படிங்க: ஜாம்பவான்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் 'கடைசி தலைமுறை ஃபாஸ்ட் பவுலர் கர்ட்லி அம்ப்ரோஸ்'