ETV Bharat / sports

சாதனை படைப்பாரா பும்ரா? - சாஹல்

புனே: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால், அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைக்கவுள்ளார்.

ind-vs-sl-3rd-t20i-bumrah-on-verge-of-creating-this-record

author img

By

Published : Jan 9, 2020, 11:03 PM IST

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி நாளை புனேவில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் இந்திய வீரர்களில் அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா முதலிடம் பிடிப்பார்.

இந்தப் பட்டியலில் பும்ரா, அஷ்வின், சாஹல் ஆகியோர் 52 விக்கெட்டுகள் வீழ்த்தி மூன்று பேரும் முதலிடத்தில் உள்ளனர். இதுவரை அஷ்வின் 46 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளையும், சாஹல் 36 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும், பும்ரா 44 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

பும்ரா
பும்ரா

பும்ரா நாளை இலங்கைக்கு எதிராக நடக்கும் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார் என்றால், 53 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடிப்பார். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு காயம் காரணமாக ஓய்விலிருந்த பும்ரா, இந்தத் தொடரில்தான் அணிக்கு திரும்பினார். இந்தத் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி 31 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார்: ரவி சாஸ்திரி!

Intro:Body:

dd

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.