இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த மைதானம் இந்தியர்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், மார்க் வாக் ஆகியோர் தங்களது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புஜரா, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் சேகரிப்பது கடினம் என இங்கிலாந்து வீரர்களுக்கு தெரியும் என்றும், இந்திய மண்ணில் வெளிநாட்டு அணிகள் ரன் எடுக்க எப்போதும் தடுமாறுவது உண்டு எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர். சென்னை ஆடுகளத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட்டதாக தோன்றவில்லை என்றும் புஜரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: இரண்டாவது முறையாக கோப்பையைத் தன்வசமாக்கினார் ஒசாகா