ETV Bharat / sports

IND vs ENG போட்டிகள்: பயிற்சியை தொடங்கிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணியின் வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் தங்களது பயிற்சிகளுக்கு திரும்பினர்.

IND vs ENG: Archer, Burns, Stokes to begin training

author img

By

Published : Jan 30, 2021, 12:31 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டில் பிப்ரவரி 05ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக இருநாட்டு வீரர்களும் கடந்த புதன்கிழமை (ஜன.27) சென்னைக்கு வந்து, தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாதாகவே சென்னைக்கு வந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ரோரி பர்ன்ஸ், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர், தங்களது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் மூவரும் இன்று (ஜன.30) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்களது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து, இன்று முதல் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சிக்கு திரும்பினர். மேலும், அணியின் மற்ற வீரர்கள் தனிமைப்படுத்துதல் காலத்தில் இருப்பதால், இன்னும் மூன்று நாள்களுக்கு இந்த வீரர்கள் மட்டுமே தனித்து பயிற்சியை மேற்கொள்வர்" என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் உள்ளூர் போட்டிகள் தொடக்கம் : பிசிசிஐ அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.