சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் அஸ்வின் - விராட் கோலி இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து அசத்தினார். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு 286 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸை நிறைவு செய்தது.
-
Crowd favourite 🔥
— ICC (@ICC) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
R Ashwin’s first Test century at his home ground!#INDvENG pic.twitter.com/Fpa2XPOfEC
">Crowd favourite 🔥
— ICC (@ICC) February 15, 2021
R Ashwin’s first Test century at his home ground!#INDvENG pic.twitter.com/Fpa2XPOfECCrowd favourite 🔥
— ICC (@ICC) February 15, 2021
R Ashwin’s first Test century at his home ground!#INDvENG pic.twitter.com/Fpa2XPOfEC
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 106 ரன்களையும், கேப்டன் விராட் கோலி 62 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டோமினிக் சிப்லி 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோரி பர்ன்ஸ் - லாரன்ஸ் இணை அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஜேக் லீச், அக்சர் பட்டேலின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஜோ ரூட்டும் தட்டுத் தடுமாறி விக்கெட் இழப்பை தடுத்தார்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
-
India have bowled well to leave England stuttering on 53/3 at the end of day three.
— ICC (@ICC) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
They need seven wickets, while England need 429 more to win!#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/s7km9iiGUm
">India have bowled well to leave England stuttering on 53/3 at the end of day three.
— ICC (@ICC) February 15, 2021
They need seven wickets, while England need 429 more to win!#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/s7km9iiGUmIndia have bowled well to leave England stuttering on 53/3 at the end of day three.
— ICC (@ICC) February 15, 2021
They need seven wickets, while England need 429 more to win!#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/s7km9iiGUm
நாளை நடைபெறவுள்ள நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 429 ரன்கள் தேவைப்படுகிறது. அதற்குள், இந்திய அணி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றி நம் வசமாகிவிடும்.
இதையும் படிங்க: சாதி, மத, பேதம் எனக்கில்லை- யுவராஜ் சிங் மன்னிப்பு!