சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.13) ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை குவித்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 161 ரன்களையும், துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே 67 ரன்களையும் எடுத்திருந்தனர். இதையடுத்து ரிஷப் பந்த் 33 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 5 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கினர்.
இன்றைய ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன் ஏதுமின்றியும் மோயீன் அலி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய ரிஷப் பந்த், மைதானத்தில் சிக்கசர்களைப் பறக்கவிட்டு அரைசதத்தைக் கடந்தார்.
-
Rishabh Pant brings up his sixth Test fifty 👏
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
How many more can he add from here?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/EQaVcyB0ph
">Rishabh Pant brings up his sixth Test fifty 👏
— ICC (@ICC) February 14, 2021
How many more can he add from here?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/EQaVcyB0phRishabh Pant brings up his sixth Test fifty 👏
— ICC (@ICC) February 14, 2021
How many more can he add from here?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/EQaVcyB0ph
ஆனால் பின்னர் களமிறங்கிய வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
Moeen Ali picks up four wickets as India are all out for 329.
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rishabh Pant remains unbeaten on 58.#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/NObyPQiW1n
">Moeen Ali picks up four wickets as India are all out for 329.
— ICC (@ICC) February 14, 2021
Rishabh Pant remains unbeaten on 58.#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/NObyPQiW1nMoeen Ali picks up four wickets as India are all out for 329.
— ICC (@ICC) February 14, 2021
Rishabh Pant remains unbeaten on 58.#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/NObyPQiW1n
இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் மோயீன் அலி நான்கு விக்கெட்டுகளையும், ஒல்லி ஸ்டோன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:Pak vs SA: பந்துவீச்சில் மிரட்டிய பிரிட்டோரியஸ்; தொடரை சமன் செய்தது தெ.ஆப்பிரிக்கா!