இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடிவருகிறது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (மார்ச் 12) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.
-
Toss news from Ahmedabad!
— ICC (@ICC) March 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
England have won the toss and they have opted to bowl in the first #INDvENG T20I. pic.twitter.com/z7BaMSizZK
">Toss news from Ahmedabad!
— ICC (@ICC) March 12, 2021
England have won the toss and they have opted to bowl in the first #INDvENG T20I. pic.twitter.com/z7BaMSizZKToss news from Ahmedabad!
— ICC (@ICC) March 12, 2021
England have won the toss and they have opted to bowl in the first #INDvENG T20I. pic.twitter.com/z7BaMSizZK
இப்போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காயத்திலிருந்து மீண்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்கிடைத்துள்ளது.
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர்.
இங்கிலாந்து அணி: ஈயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், மார்க் வுட்.
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார்? இந்தியா vs இங்கிலாந்து