இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 274 ரன்களுடன் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இந்த ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 369 ரன்களுக்கு இன்னிங்ஸை நிறைவு செய்தது.
-
✅ Two Test debutants
— ICC (@ICC) January 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
✅ Two three-wicket hauls
Nicely done, @Sundarwashi5 and @Natarajan_91! 👏#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/kqifFEyMUq
">✅ Two Test debutants
— ICC (@ICC) January 16, 2021
✅ Two three-wicket hauls
Nicely done, @Sundarwashi5 and @Natarajan_91! 👏#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/kqifFEyMUq✅ Two Test debutants
— ICC (@ICC) January 16, 2021
✅ Two three-wicket hauls
Nicely done, @Sundarwashi5 and @Natarajan_91! 👏#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/kqifFEyMUq
இதில் இந்திய அணியின் அறிமுக வீரர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நடராஜன் தங்கராசு தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மா - சுப்மன் கில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் சுப்மன் கில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார்.
அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் அஜிங்கியா ரஹானே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.
-
Tea in Brisbane ☕
— ICC (@ICC) January 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rohit's 44 powered India, but his dismissal swung the session Australia's way.
India are 62/2. How will Pujara and Rahane fare in the final session?#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/S9nqWxjMUP
">Tea in Brisbane ☕
— ICC (@ICC) January 16, 2021
Rohit's 44 powered India, but his dismissal swung the session Australia's way.
India are 62/2. How will Pujara and Rahane fare in the final session?#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/S9nqWxjMUPTea in Brisbane ☕
— ICC (@ICC) January 16, 2021
Rohit's 44 powered India, but his dismissal swung the session Australia's way.
India are 62/2. How will Pujara and Rahane fare in the final session?#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/S9nqWxjMUP
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 2 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன், பாட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: சயீத் முஷ்டாக் அலி: மும்பை அணிக்காக அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர்!