ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை (ஜன.15) பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. போட்டி தொடங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் இணை இந்திய அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசியது.
-
That's 2️⃣ wickets for 2️⃣ runs off seven balls 😮
— ICC (@ICC) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Washington Sundar takes the scalp of David Warner for 48.#AUSvIND | https://t.co/oDTm209M8z pic.twitter.com/3qw2VTnarg
">That's 2️⃣ wickets for 2️⃣ runs off seven balls 😮
— ICC (@ICC) January 18, 2021
Washington Sundar takes the scalp of David Warner for 48.#AUSvIND | https://t.co/oDTm209M8z pic.twitter.com/3qw2VTnargThat's 2️⃣ wickets for 2️⃣ runs off seven balls 😮
— ICC (@ICC) January 18, 2021
Washington Sundar takes the scalp of David Warner for 48.#AUSvIND | https://t.co/oDTm209M8z pic.twitter.com/3qw2VTnarg
இதில் 38 ரன்களில் மார்கஸ் ஹாரிஸ் ஆட்டமிழக்க, அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னரும் 48 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய லபுசாக்னே 25 ரன்களிலும், மேத்யூ வேட் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்களுடனும், காமரூன் கிரீன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Four wickets fall in the first session with Australia leading by 182 runs at lunch.#AUSvIND | https://t.co/oDTm209M8z pic.twitter.com/iwJca4DFHY
— ICC (@ICC) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Four wickets fall in the first session with Australia leading by 182 runs at lunch.#AUSvIND | https://t.co/oDTm209M8z pic.twitter.com/iwJca4DFHY
— ICC (@ICC) January 18, 2021Four wickets fall in the first session with Australia leading by 182 runs at lunch.#AUSvIND | https://t.co/oDTm209M8z pic.twitter.com/iwJca4DFHY
— ICC (@ICC) January 18, 2021
இந்திய அணி தரப்பில் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். உணவு இடைவேளைக்குப் பின் 182 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: தோல்விக்கு பழிதீர்த்த நார்த் ஈஸ்ட்; டிராவில் முடிந்த கோவா - ஏடிகே ஆட்டம்!