ETV Bharat / sports

சச்சினுக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி சிறுவன் - ஏன்? - சச்சினுக்கு நன்றி கூறிய மாற்றுத்திறனாளி சிறுவன்

மாற்றுத்திறனாளி சிறுவன், தான் விளையாடிய கிரிக்கெட் வீடியோவை பகிர்ந்ததற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

'I'm thankful', says differently-abled boy after Tendulkar shares his cricket video

author img

By

Published : Jan 3, 2020, 1:11 PM IST

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தெருவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர். அதில், போலியா நோயால் தாக்கப்பட்டு முற்றிலும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன், மற்றொரு சிறுவனுக்கு இணையாக ரன் எடுக்க ஓடியுள்ளார். இதனை அங்குள்ள ஒருவர் காணொலி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

சமூக வலைதளவாசிகள் செய்த ட்ரெண்ட்டில் அந்தக் காணொலி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் கவனத்திற்கும் சென்றது. காணொலியைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த அவர், புத்தாண்டு அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதனுடன், "இந்தப் புத்தாண்டை, சிறுவன் மடராமின் தன்னம்பிக்கை காணொலி மூலம் அனைவரும் தொடங்குங்கள். இந்தக் காணொலி எனது இதயத்தை மிகவும் நெகிழ வைத்தது” என்று பதிவிட்டிருந்தார்.

  • Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket 🏏 with his friends.
    It warmed my heart and I am sure it will warm yours too. pic.twitter.com/Wgwh1kLegS

    — Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தச் சூழலில் சச்சின் தனது காணொலியைப் பகிர்ந்ததற்கு, சச்சினுக்கு நன்றி அச்சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு வருடங்களாக இவ்வாறு ஓடியே ரன் எடுப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, சிறுவன் வசிக்கும் மாவட்டத்தின் கல்வித்துறை சார்பில், அலுவலர்கள் கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய கிட் ஒன்றையும், மூன்று சக்கர சைக்கிள் ஒன்றையும் அச்சிறுவனக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'எப்போதும் எங்கள் மனதில் வாழ்வீர்கள்' - ஆசானை நினைவுகூர்ந்த சச்சின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.