தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் அடைந்த தோல்விக்குப் பின், இங்கிலாந்து அணியின் எழுச்சியை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணிலேயே வீழ்ந்தது. இந்த டெஸ்ட் தொடரை இழந்ததால், அந்த அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ்ஸின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் அணியிலிருந்து டூ ப்ளஸிஸ் நீக்க்கப்பட்டு, டி காக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேசுகையில், '' இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக உள்ளது பெருமையாக உள்ளது. முதல் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்த வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது.
இங்கிலாந்து அணியின் இந்த மாற்றம் ஒரு இரவில் நடக்கவில்லை. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் மற்றவர்கள் சிறப்பாக செயல்பட காரணமாக அமைந்துள்ளனர். இந்த அணியின் திறமைக்கு இனி வானம்தான் எல்லையாக இருக்கப்போகிறது'' என்றார்.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பேசுகையில், ''ஜோ ரூட் அணியை நன்றாக வழிநடத்தினார். சீனியர் வீரர்கள் சரியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டனர். இளம் வீரர்கள் ஒரே தொடரில் நட்சத்திரமாக வளர்ந்துள்ளனர்'' என்றார்.
இதையும் படிங்க: தோனியின் இடம் அப்படியேதான் உள்ளது... மிஸ் யூ தோனி பாய்’ - உருகிய சாஹல்!