ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி; இந்திய அணிக்கு ரசிகர்கள் சிறப்பு வாழ்த்து

author img

By

Published : Mar 8, 2020, 12:09 PM IST

ஹைதரபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றபெற நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ICC
ICC

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆறு முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து நான்கு முறை சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.

இதுவரை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகள்

முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய பெண்கள் அணிக்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் களமிறங்கும் இந்திய பெண்கள் அணி வெற்றிக்கோப்பையை கைப்பற்றி நாடு திரும்ப வேண்டும் என தங்களின் வாழ்த்து செய்தியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் வாழ்த்து மழை

மேலும், களத்தில் ஆடும் 11 பெண் வீராங்கனைகளுக்கு 120 கோடி மக்களும் பக்கபலமாக துணை நிற்போம் எனவும் ரசிகர்கள் உற்சாகமூட்டும் வகையில் தெரிவித்துள்ளனர். உலக மகளிர் தினத்தில் இந்த மகளிர் டி20 இறுதிப்போட்டி நடைபெறுவது கூடுதல் சிறப்பு என பெண் ரசிகைகள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முதல் பந்தில் இருந்து வெற்றிப் பயணத்தை தொடங்குவோம் - இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.