ETV Bharat / sports

டெஸ்ட் தரவரிசை: டாப் 3-இல் அஸ்வின், டாப் 10-இல் நுழைந்த ரோஹித்! - ரோஹித் சர்மா

ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ICC Test Rankings: Rohit Sharma breaks into top-10 for the first time

author img

By

Published : Feb 28, 2021, 9:23 PM IST

நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி ஏறக்குறைய தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (பிப்.28) டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 8ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிர்க்கெட்டில் ரோஹித் சர்மா பெற்ற அதிகபட்ச தரவரிசையாகவும் இது அமைந்துள்ளது.

மேலும் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோல் அறிமுக வீரரான அக்சர் பட்டேல், கடந்த போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் 30 இடங்கள் முன்னேறி 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலின் பேட்டிங்கில் கேன் வில்லியம்சன்னும், பந்துவீச்சாளர்களில் பாட் கம்மின்ஸும் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நல்ல பிட்ச் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் ?' - கொதித்தெழும் அஸ்வின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.