ETV Bharat / sports

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், ரோஹித், ரிஷப் அபாரம் - ரிஷப் பந்த்

ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ICC Test Rankings: R Ashwin breaks into top 5 all-rounders

author img

By

Published : Feb 17, 2021, 4:19 PM IST

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (பிப்.17) டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

பேட்டிங் தரவரிசை

பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 2 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்தையும், ரோஹித் சர்மா 9 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இப்பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம் சன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசாக்னே ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

பந்துவீச்சு தரவரிசை

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் நெய்ல் வாக்னர் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.

  • 🔸 Rohit Sharma breaks into top 15 batsmen
    🔸 Rishabh Pant achieves career-best position
    🔸 Gains for Bangladesh, West Indies and England players

    All this and much more in the latest @MRFWorldwide ICC Test Player Rankings 👇https://t.co/oTSOyRyVJt

    — ICC (@ICC) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாவது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா எட்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஆல்ரவுண்டர் தரவரிசை

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி டாப் 5 -ல் இடம்பிடித்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தையும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி: ஆலோசிக்கும் பிசிசிஐ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.