சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 17 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி 911 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுசானே ஒரு இடம் முன்னேறி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐந்து இடங்கள் முன்னேறி பத்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
மேலும் இப்பட்டியலில், இந்திய அணியின் புஜாரா ஆறாவது இடத்திற்கும் ரஹானே ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை:
- விராட் கோலி - இந்தியா - 928 புள்ளிகள்
- ஸ்டீவ் ஸ்மித் - ஆஸ்திரேலியா - 911 புள்ளிகள்
- மார்னஸ் லபுசானே - ஆஸ்திரேலியா - 827 புள்ளிகள்
- கேன் வில்லியம்சன் - நியூசிலாந்து - 814 புள்ளிகள்
- டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா - 793 புள்ளிகள்
- செதேஷ்வர் புஜாரா - இந்தியா - 791 புள்ளிகள்
- பாபர் அசாம் - பாகிஸ்தான் - 767 புள்ளிகள்
- ஜோ ரூட் - இங்கிலாந்து - 761 புள்ளிகள்
- ரஹானே - இந்தியா - 759 புள்ளிகள்
- பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து - 708 புள்ளிகள்
இதையும் படிங்க: WWE போட்டிகள் ஃபிக்ஸிங் தான் ' - தி கிரேட் காளி பிரத்யேக நேர்காணல்!