ETV Bharat / sports

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முன்னேறிய ரூட், பின்னடைவைச் சந்தித்த கோலி - இங்கிலாந்து அணியின் கேப்டன்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ICC Test Rankings: Kohli down to fifth as Root moves up to third after Chennai double century

author img

By

Published : Feb 10, 2021, 6:17 PM IST

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (பிப்.09) முடிவடைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை இன்று (பிப்.10) வெளியிட்டுள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இப்பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்று இடங்கள் முன்னேறி 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா ஒரு இடங்கள் முன்னேறி 7 மற்றும் 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ், இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.