மெல்போர்னில் நேற்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதின. 86 ஆயிரத்து 174 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
பொதுவாக, ஒவ்வொரு ஐசிசி உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவிப்பது வழக்கம். அந்தவகையில், ஐசிசி அறிவித்த மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் 11 வீராங்கனைகள் கொண்ட சிறந்த அணியில் இந்திய சார்பில் சுழற்பந்து வீராங்கனை பூனம் யாதவுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.
-
Introducing your Women's #T20WorldCup 2020 Team of the Tournament 🌟 pic.twitter.com/Eb4wQUc7Ls
— T20 World Cup (@T20WorldCup) March 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Introducing your Women's #T20WorldCup 2020 Team of the Tournament 🌟 pic.twitter.com/Eb4wQUc7Ls
— T20 World Cup (@T20WorldCup) March 9, 2020Introducing your Women's #T20WorldCup 2020 Team of the Tournament 🌟 pic.twitter.com/Eb4wQUc7Ls
— T20 World Cup (@T20WorldCup) March 9, 2020
அவர் அந்தத் தொடரில் 10 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அந்தத் தொடரில் தனது அதிரடியான பேட்டிங்மூலம் அனைவரையும் கவர்ந்த இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா 12ஆவது நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அணியில், ஆஸ்திரேலியாவிலிருந்து பெத் மூனி, அலிசா ஹீலே, மெக் லானிங், மேகன் ஷட், ஜெஸ் ஜோனாசென் ஆகிய ஐந்து பேரும், இங்கிலாந்திலிருந்து ஹிதர் நைட், நாட் ஸிவர், சோபி எக்லெஸ்டோன், அன்யா ஷ்ரப்சோல் ஆகிய நான்கு பேரும் இடம்பெற்றனர்.
மேலும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து லவ்ரா வுல்வார்ட்டிக்கும் இந்த அணியில் இடம் கிடைத்தது. ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தி உலகக்கோப்பை வென்றுதந்த மெக் லானிங்தான் இந்த அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கப் அடிக்கலனா என்னா... நீங்க தடையைத் தாண்டி விளையாடுனதே பெருசுதான் - கம்பீர்