அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில், டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 114 புள்ளிகள் சரிவடைந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
2016 அக்டோபர் மாதத்திலிருந்து முதலிடத்திலிருந்த கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது முதன்முறையாக இச்சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம், இப்பட்டியலில் ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்திய அணி இறுதியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால்தான் இச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்திருந்தாலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஏழு வெற்றியும், இரண்டு தோல்வியும் சந்தித்துள்ளது.
இதேபோல், ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. இப்பட்டியலில் இங்கிலாந்து அணி 127 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதைத்தொடர்ந்து இந்திய அணி 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
-
No.1 teams in the @MRFWorldwide ICC Rankings:
— ICC (@ICC) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tests ➡️ Australia
ODIs ➡️ England
T20Is ➡️ Australia
Lastest rankings 👉 https://t.co/AeaYDWqlfh pic.twitter.com/uv9hTGkN3L
">No.1 teams in the @MRFWorldwide ICC Rankings:
— ICC (@ICC) May 1, 2020
Tests ➡️ Australia
ODIs ➡️ England
T20Is ➡️ Australia
Lastest rankings 👉 https://t.co/AeaYDWqlfh pic.twitter.com/uv9hTGkN3LNo.1 teams in the @MRFWorldwide ICC Rankings:
— ICC (@ICC) May 1, 2020
Tests ➡️ Australia
ODIs ➡️ England
T20Is ➡️ Australia
Lastest rankings 👉 https://t.co/AeaYDWqlfh pic.twitter.com/uv9hTGkN3L
டி20 போட்டிகள் பொறுத்தவரையில், தரவரிசைப் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 27 மாதங்களாக முதலிடத்தில் இருந்துவந்த பாகிஸ்தான் அணி தற்போது 260 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணி 278 புள்ளிகளுடன் முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதனால், மூன்றாவது இடத்திலிருந்த இங்கிலாந்து அணி ஒரு இடம் முன்னேறி 268 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், நான்காம் இடத்திலிருந்த இந்திய அணி தற்போது 266 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: நியூசிலாந்து கிரிக்கெட்டருக்கான விருது வென்ற ராஸ் டெய்லர்...!