நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பராக வலம் வந்தவர் இயன் ஸ்மித். இவர் நியூசிலாந்து அணிக்காக 63 டெஸ்ட் மற்றும் 98 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்ரும் இவர் நியூசிலாந்து அணியின் 112 சர்வதேச போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட்டிற்கு ஸ்மித் செய்த சேவையை பாராட்டி பெர்ட் சுட்க்ளிஃப் பதக்கம் வழங்கி கவுரவிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
இவ்விருதினை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கிரெக் பார்க்லே(Greg Barclay) காணொலி (virtual ceremony) மூலம் ஸ்மித்திற்கு வழங்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
-
“It’s been a great journey and I wouldn’t trade it for a second.” - Ian Smith on being awarded the Bert Sutcliffe Medal #ANZNZCAwards https://t.co/ZqUisRpT1g
— BLACKCAPS (@BLACKCAPS) April 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“It’s been a great journey and I wouldn’t trade it for a second.” - Ian Smith on being awarded the Bert Sutcliffe Medal #ANZNZCAwards https://t.co/ZqUisRpT1g
— BLACKCAPS (@BLACKCAPS) April 27, 2020“It’s been a great journey and I wouldn’t trade it for a second.” - Ian Smith on being awarded the Bert Sutcliffe Medal #ANZNZCAwards https://t.co/ZqUisRpT1g
— BLACKCAPS (@BLACKCAPS) April 27, 2020
இது குறித்து ஸ்மித் கூறுகையில், நான் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவன். இந்த விருது எனக்கு கிடைக்கும் என நான் கனவிலும் நினைத்தது கிடையாது. மேலும் இவ்விருதை பெற்றவர்களின் பட்டியலில் தற்போது எனது பெயரும் இடம்பெறுவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தோனியின் இடத்தை நிரப்புவது சவால்: ராகுல்!