கரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால், வீட்டில் முடங்கியிருக்கும் பெரும்பாலான வீரர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவழித்துவருகின்றனர்.
அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பலிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஸ்டீவ் ஸ்மித், கோலி இவர்களில் யாரை சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வுசெய்வீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு சாப்பல், பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் நான் விராட் கோலியை தேர்வு செய்கிறேன் என பதிலளித்தார்.
தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். இருப்பினும் இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அதேபோல் மற்றொரு ரசிகர், உங்கள் அணியில் நீங்கள் விரும்பிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற வேண்டும் என நினைத்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, வெஸ்ட் இண்டீஸின் மால்கம் மார்ஷல், பாகிஸ்தானின் வாசிம் அக்ரமை தேர்வு செய்வேன் என தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய இயன் சாப்பல், 76 டெஸ்ட் போட்டிகளில் 5,345 ரன்களும், 16 ஒருநாள் போட்டிகளில் 673 ரன்களும் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: 2016-க்குப் பிறகு டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்த இந்தியா!