உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக விஜய் சங்கர் விலகினார். இதனால் அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் இடம் பிடித்தார். இந்த தருணத்தில், தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு திடீரென கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக, இந்திய அணியில் நான்காவது வரிசையில் எந்த வீரரை களமிறக்கலாம் என்ற பிரச்னை நீண்ட நாட்களாகவே இருந்து கொண்டுவருகிறது. இதனால், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று டைமென்ஷன்களில் (3டி) விஜய் சங்கர் சிறப்பாக விளங்குவதால் அவரை அணியில் தேர்வு செய்தோம் என இந்திய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ஏப்ரல் 15 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, உலகக் கோப்பைத் தொடரைக் காண புது '3டி கண்ணாடி'யைக் ஆர்டர் செய்துள்ளேன் என, எம்.எஸ்.கே பிரசாத்தை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் செய்தார் ராயுடு.
-
Just Ordered a new set of 3d glasses to watch the world cup 😉😋..
— Ambati Rayudu (@RayuduAmbati) April 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just Ordered a new set of 3d glasses to watch the world cup 😉😋..
— Ambati Rayudu (@RayuduAmbati) April 16, 2019Just Ordered a new set of 3d glasses to watch the world cup 😉😋..
— Ambati Rayudu (@RayuduAmbati) April 16, 2019
இதனால்தான், ராயுடு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததையடுத்து, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யபட்டது. பின்னர் ராயுடுவின் ட்வீட் குறித்து அவர் கூறுகையில்,
"ராயுடுவின் 3டி ட்வீட்டை நான் ரசித்தேன். அந்த ட்வீட் நக்கலாகவும் நல்ல டைமிங்கில் அவர் பதிவு செய்திருந்தார். அவர் 2017-18 டி20 போட்டிகளில் சிறப்பான ஃபார்மில் இருந்தும் யோ-யோ உடற்பயிற்சி தேர்வில் தோல்வி அடைந்தார். அதன்பிறகு அவரை இந்திய அணியில் நாங்கள் தேர்வு செய்ததால், எங்களை ஏராளமானோர் விமர்சித்தனர். ஒரு சில காம்பினேஷன்களால் அவரை உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லையே தவிர, அவருக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ததில்லை" எனக் கூறினார்.