ETV Bharat / sports

எனக்கு பயமும் இருக்கும்.. பதற்றமும் இருக்கும்... கேப்டன் கூல் தோனி! - Chennai Super Kings

ஒவ்வொரு போட்டியில் களமிறங்கி முதல் 10 பந்துகளை எதிர்கொள்ளும் வரை எனக்கு பயமும் பதற்றமும் இருக்கும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

i-feel-pressure-i-feel-scared-too-admits-m-s-dhoni-while-speaking-on-mental-health
i-feel-pressure-i-feel-scared-too-admits-m-s-dhoni-while-speaking-on-mental-hei-feel-pressure-i-feel-scared-too-admits-m-s-dhoni-while-speaking-on-mental-healthalth
author img

By

Published : May 7, 2020, 4:43 PM IST

விளையாட்டுப் போட்டிகளில் மன அழுத்தமின்றி மன உறுதியோடு இருப்பதற்காக MFORE என்ற நிறுவனத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தொடங்கியுள்ளார். இதற்கு ஆதரவளிக்கும் வகையில் விளையாட்டுகளிலும் வாழ்க்கையிலும் மன உறுதி எந்த அளவிற்கு முக்கியம் என்பது பற்றி கேப்டன் கூல் தோனி பேசியுள்ளார்.

அதில், '' இந்தியாவில் மன அழுத்தம் ஏற்படுவதை ஒத்துக்கொள்வதில் அனைவருக்கும் ஒரு தயக்கம் உள்ளது. அதனை நாங்கள் மன நோய் எனக் கூறுவோம். நான் ஒவ்வொரு முறை பேட்டிங் களமிறங்கும்போதும் முதல் 5 முதல் 10 பந்துகளை எதிர்கொள்ளும் போது பதற்றம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் பயமும் இருக்கும். சிலருக்கு அதிகமாகவே இருக்கும்.

இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நாம் இதனை பயிற்சியாளர்களிடம் சொல்வதற்கு அதிகமாக தயக்கம் காட்டுவோம். இதனை ஈடுசெய்வதற்கு பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

மன அழுத்தத்தை சமன் செய்யக்கூடிய பயிற்சியாளர் 15 நாள்கள் மட்டும் நம்முடன் இருந்தால், நாம் நமது பிரச்னையை மட்டுமே கூறமுடியும். நம் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்றால் அவர்கள் எப்போதும் நம்முடன் பயணிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் மனத் தெளிவுடன் இருப்பது மிகவும் முக்கியம்'' என்றார்.

சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் சிலகாலம் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதேபோல் இங்கிலாந்து நட்சத்திர வீராங்கனை சாரா டெய்லர் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனி நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.