ETV Bharat / sports

மந்தனா - ரோட்ரிக்ஸ் கெமிஸ்ட்ரி - ஐசிசி நடத்திய பர்ஃபெக்ட் பேர் போட்டி - ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகிய இருவருக்கும் இடையே எந்தளவு புரிதல் ஊள்ளது என்பதை ‘பர்ஃபெக்ட் பேர்’ விளையாட்டின் மூலம் ஐசிசி வெளிக்கொணர்ந்துள்ளது.

How well do Smriti Mandhana and Jemimah Rodrigues

author img

By

Published : Apr 20, 2020, 9:13 AM IST

இந்தாண்டு தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஐந்தாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இத்தொடருக்கு இடையே ஓவ்வொரு அணி வீராங்கனைகளுக்கும் அவர்களது சக அணி வீராங்கனைகளுடன் எந்தளவு புரிதல் உள்ளது என்பதை விளக்கும் வகையில் ஐசிசி, ‘பர்ஃபெக்ட் பேர்’ (Perfect Pair) என்ற போட்டியை நடத்தியுள்ளது.

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் பங்கேற்று விளையாடிய காணொலியை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. அக்காணொலியில், அவர்களுக்கு பிடித்த தேநீர், எதைக் கண்டு அவர்கள் மிகவும் பயப்படுவார்கள், அவர்களுடைய பிறந்தநாள், அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் உணவு எது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்துள்ளனர். இருவருக்கும் இடையிலான இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 4-3 என்ற கணக்கில் வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்டது.

இதையும் படிங்க:ஒரு ரசிகனாக அவரை டி20 உலக்கோப்பைத் தொடரில் காணவிரும்புகிறேன் - ஸ்ரீகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.