ஆண்டுதோறும் தங்களது துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கும், மக்கள் மத்தில் பிரபலமடைந்தவர்களுக்கும் லண்டன் நகரத்தின் லார்ட் மேயர் ‘ஃப்ரீடம் ஆஃப் தி சிட்டி ஆஃப் லண்டன்’ எனும் விருதை வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான ‘ஃப்ரீடம் ஆஃப் தி சிட்டி ஆஃப் லண்டன்’ விருது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங், இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை எபோனி ரெயின்போர்ட் ப்ரெண்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக லண்டன் நகரின் லார்ட் மேயர் வில்லியம் ரஸ்ஸல் அறிவித்துள்ளார்.
இதில், மைக்கேல் ஹோல்டிங் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்திற்கு ஆதவரவளித்ததற்காகவும், எபோனி ரெயின்போர்ட் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வில்லியம் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘பகலிரவு டெஸ்டில் கிரீன் பங்கேற்பார்’ - டிம் பெய்ன்