இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், ஒரு சிறுவனின் வீடியோவை கடந்த நவம்பர் மாதம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மற்றொரு முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன், இந்த சிறுவனை உங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள முடியுமா கோலி என பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுவன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பேட்டிங் செய்வதைப் போன்றே ஸ்டைலில் பேட் செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டுவருகிறது.
- View this post on Instagram
WHAT?!?!?!?!?! Get him in your squad, @virat.kohli! Can you pick him?!?! 😱
">
இதைப் பார்த்த விராட் கோலி, இச்சிறுவன் சாத்தியமில்லாத ஒருவன் என பதிவிட்டார். இந்த வீடியோவைக் கண்ட தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக்ஸ் காலிஸ், நல்ல திறமை உள்ள சிறுவன். ஆனால் இன்னும் டையாப்பர் அணிந்திருக்கிறார் என பதிவிட்டிருந்தார்.