இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம்வந்தவர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்தாண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியின்போது தனது முதுக்குப்பகுதியில் காயமடைந்தார். இதனையடுத்து காயம் காரணமாக லண்டனில் அறுவைசிகிச்சை மேற்கொண்ட பாண்டியா கடந்த ஐந்து மாதங்களாக ஓய்விலிருந்து வந்தார்.
இதனையடுத்து பூரண உடல்நலமடைந்த பாண்டியா நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்காக தேர்வுசெய்யப்பட்டிருந்தார். மேலும் இவர் இந்தப் போட்டிக்காகத் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுவந்திருந்தார்.
இதனையடுத்து தற்போது என்.சி.ஏ. (தேசிய கிரிக்கெட் அகாதமி) பாண்டியா தனது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார என்ற சோதனைக்கு அழைந்திருந்தது. இதனையடுத்து இச்சோதனையில் பங்கேற்ற பாண்டியா தோல்வியடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் என்.சி.ஏ.வின் தலைமை மருத்துவர் ஆஷிக் கௌஷிக், பாண்டியாவை மீண்டும் தனது அறுவைசிகிச்சை குறித்து அறிய லண்டனுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார். மேலும் அவர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்பதால் அவரால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ஹர்திக் பாண்டியா தனது அறுவை சிகிச்சை குறித்து அறிய லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்திய அணியில் ஓய்விலிருந்த பாண்டியா, தற்போது மீண்டும் சிகிச்சைக்காகச் சென்றுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிக் பாஷ் லீக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிட்னி சிக்சர்ஸ்!