சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் 106 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை கைப்பற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான ஹர்பஜன் சிங், இந்திய அணிக்கான வாழ்த்து செய்தியை தமிழில் பாட்டாக பதிவுசெய்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில்,“சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.!
அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான்.!
மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான்.!
இந்திய அணியின் வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்..! ” என்று பதிவிட்டுள்ளார்.
-
சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.!
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான்.!
மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான்.! @BCCI வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்..! @TNCACricket #INDvEND #WhistlePodu pic.twitter.com/twOtGeD6dM
">சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.!
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 16, 2021
அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான்.!
மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான்.! @BCCI வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்..! @TNCACricket #INDvEND #WhistlePodu pic.twitter.com/twOtGeD6dMசேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.!
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 16, 2021
அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான்.!
மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான்.! @BCCI வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்..! @TNCACricket #INDvEND #WhistlePodu pic.twitter.com/twOtGeD6dM
ஹர்பஜன் சிங்கின் இந்த ட்விட்டர் பதிவு தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைத் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: சீஹ் சு வேய்யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஒசாகா!