ETV Bharat / sports

அறந்தாங்கி வன்கொடுமை: நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் - ஹர்பஜன் சிங் ட்வீட்! - அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஏழு வயது சிறுமி

சென்னை: அறந்தாங்கி வன்கொடுமையை நினைவு கூர்ந்து, “நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

Harbhajan on Aranthangi Rape
Harbhajan on Aranthangi Rape
author img

By

Published : Jul 3, 2020, 10:36 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

இச்சூழலில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.

இதனிடையே சமூகவலைதளங்களில், #JusticeforJayapriya என்ற ஹேஷ்டாக்கில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் தண்டனை வழங்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா” என்று மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ3,000 உதவித்தொகை' - முதலமைச்சருக்கு பார் கவுன்சில் நன்றிக் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.