இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ரசிகர்களால் ஹிட்மேன் என்ற புனைப்பெயருடன் அழைப்படுபவர் ரோஹித் சர்மா. கிரிக்கெட் வீரர்களில் சிறந்த திருமண ஜோடி என்ற பட்டியலில் ரோஹித் - ரித்விகாவின் பெயர் நிச்சயம் இடம்பிடித்திருக்கும்.
கடந்த 2015ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தனது நீண்ட நாள் காதலியான ரித்திகா சஜ்தேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது சமைரா சர்மா என்ற பெண் குழந்தையும் உள்ளது. அதேசமயம் ரோஹித் விளையாடும் பல போட்டிகளை ரித்திகா மைதானத்திலிருந்து ரசிக்கும் காணொலிகள் சமூக வலைதளங்களில் அவ்வபோது வைரலாகும்.
மனைவிக்கு வாழ்த்து
இந்நிலையில் ரித்விகா சஜ்தே இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து ரோஹித் சம்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ஹாப்பி பர்த்டே டார்லிங்.லவ் யூ ஃபாரெவர்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ரோஹித்
முன்னதாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரிலிருந்து, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. பின்னர் விராட் கோலி தனது குழந்தை பிறப்பு காரணமாக விடுப்பு எடுத்துள்ளதால், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
-
5 yrs down....lifetime to go @ritssajdeh 😍 pic.twitter.com/PoYknOjLN5
— Rohit Sharma (@ImRo45) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">5 yrs down....lifetime to go @ritssajdeh 😍 pic.twitter.com/PoYknOjLN5
— Rohit Sharma (@ImRo45) December 13, 20205 yrs down....lifetime to go @ritssajdeh 😍 pic.twitter.com/PoYknOjLN5
— Rohit Sharma (@ImRo45) December 13, 2020
இதற்காக இவர் கடந்த வாரம் ஆஸ்திரேலியா சென்றார். இருப்பினும் ஆஸ்திரேலியா செல்பவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தி கொள்வது அவசியம் என்பதால், இத்தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ரோஹித் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:IND vs AUS: பாக்ஸிங் டே டெஸ்டில் ஜடேஜா?