இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக ரெய்னா சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் நிதீஷ்வர் குமார், லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடியிருந்தார்.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இன்று (அக்.29) மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்துவது குறித்தும், ஜம்மூ - காஷ்மீரில் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரண் ரிஜிஜூவை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளிலும் நாட்டின் முன்னேற்றத்தை அறிந்து கொண்டது அருமையாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
-
It was wonderful meeting you @KirenRijiju Sir.. We had a great conversation on sports, and wonderful to know the progress our country in making in all sports verticals. Also loved his cricketing journey too :) #kheloindia pic.twitter.com/YW3dw6BEyw
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It was wonderful meeting you @KirenRijiju Sir.. We had a great conversation on sports, and wonderful to know the progress our country in making in all sports verticals. Also loved his cricketing journey too :) #kheloindia pic.twitter.com/YW3dw6BEyw
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 29, 2020It was wonderful meeting you @KirenRijiju Sir.. We had a great conversation on sports, and wonderful to know the progress our country in making in all sports verticals. Also loved his cricketing journey too :) #kheloindia pic.twitter.com/YW3dw6BEyw
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 29, 2020
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த சுரேஷ் ரெய்னா, நடப்பு ஐபிஎல் சீசனிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இபிஎல் 2020: கிராஸ்னோடரை பந்தாடியது செல்சி!