கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரபல டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக்(சிபிஎல்) டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, ஜமைக்கா தலவாஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தலவாஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. அதன் படி களமிறங்கிய வாரியர்ஸ் அணிக்கு பிராண்டன் கிங், சந்தர்பால் ஹெம்ராஜ் சிறப்பானத் தொடக்கத்தை தந்தனர். பின்னர் பிராண்டன் கிங் 29 ரன்களிலும், ஹெம்ராஜ் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய வாரியர்ஸ் அணியின் மற்ற வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 19.1ஓவர்களில் வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. தல்லாவாஸ் அணி சார்பில் முஜிப் உர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தலவாஸ் அணிக்கு, அதிர்ச்சியளிக்கும் வகையில் முன் வரிசை வீரர்கள் செற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் அணியின் நட்சத்திர வீரர் ரஸ்ஸல் இறுதி வரை போராடியும் அணியை தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை.
-
RUSSELL LAUNCHES! @Russell12A goes beast mode and gave us our play of the day from match 8. #CPL20 #GAWvJT #CricketPlayedLouder pic.twitter.com/X3dm4piWZ9
— CPL T20 (@CPL) August 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">RUSSELL LAUNCHES! @Russell12A goes beast mode and gave us our play of the day from match 8. #CPL20 #GAWvJT #CricketPlayedLouder pic.twitter.com/X3dm4piWZ9
— CPL T20 (@CPL) August 22, 2020RUSSELL LAUNCHES! @Russell12A goes beast mode and gave us our play of the day from match 8. #CPL20 #GAWvJT #CricketPlayedLouder pic.twitter.com/X3dm4piWZ9
— CPL T20 (@CPL) August 22, 2020
இதனால் 20 ஓவர்கள் முடிவில் தலவாஸ் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலவாஸ் அணியை வீழ்த்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இதையும் படிங்க:இரட்டை சதம் விளாசிய ஜாக் கிராலி ; சதம் விளாசிய பட்லர்!