இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் (தற்போது டெஸ்டில் மட்டும்) ரவிச்சந்திரன் அஸ்வின். 2010ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் இவரின் கேரம் பால் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மண்ணை கவ்வியுள்ளனர்.
இதனால் அணியில் சேர்ந்த ஒரே ஆண்டில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இதனால் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராகவும் வலம் வந்து அசத்தினார்.
தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள 2010 முதல் 2020 வரையிலான அனைத்து வகையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவர் இந்த பத்தாண்டுகளில் 564 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இச்சாதனையைப் புரிந்துள்ளார். மேலும் சர்வதேச அலவில் இந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
-
Most international wickets this decade:
— ICC (@ICC) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
1️⃣ – @ashwinravi99 (564)
2️⃣ – @jimmy9 (535)
3️⃣ – @StuartBroad8 (525)
4️⃣ – Tim Southee (472)
5️⃣ – @trent_boult (458) pic.twitter.com/mkMI5g0VRR
">Most international wickets this decade:
— ICC (@ICC) December 24, 2019
1️⃣ – @ashwinravi99 (564)
2️⃣ – @jimmy9 (535)
3️⃣ – @StuartBroad8 (525)
4️⃣ – Tim Southee (472)
5️⃣ – @trent_boult (458) pic.twitter.com/mkMI5g0VRRMost international wickets this decade:
— ICC (@ICC) December 24, 2019
1️⃣ – @ashwinravi99 (564)
2️⃣ – @jimmy9 (535)
3️⃣ – @StuartBroad8 (525)
4️⃣ – Tim Southee (472)
5️⃣ – @trent_boult (458) pic.twitter.com/mkMI5g0VRR
அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 535 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடத்திலும், ஸ்டூவர்ட் ப்ராட் 525 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சௌதி 472 விக்கெட்டுகளையும், ட்ரண்ட் போல்ட் 458 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை, 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 362 விக்கெட்டுகளையும், 111 ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும், 46 டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், இவரின் திறமை இன்றியமையாதது, ஆனால் தற்போது இவரின் இச்சாதனை யவராலும் குறிப்பிடப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
-
Most international wickets for ashwin this decade @ashwinravi99 @bcci .. what an effort .. just get a Feeling it goes unnoticed at times .. super stuff .. pic.twitter.com/TYBCHnr0Ow
— Sourav Ganguly (@SGanguly99) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Most international wickets for ashwin this decade @ashwinravi99 @bcci .. what an effort .. just get a Feeling it goes unnoticed at times .. super stuff .. pic.twitter.com/TYBCHnr0Ow
— Sourav Ganguly (@SGanguly99) December 24, 2019Most international wickets for ashwin this decade @ashwinravi99 @bcci .. what an effort .. just get a Feeling it goes unnoticed at times .. super stuff .. pic.twitter.com/TYBCHnr0Ow
— Sourav Ganguly (@SGanguly99) December 24, 2019
அஸ்வின் சமீப காலமாக இந்தியாவின் ஒருநாள், டி20 அணிகளுக்கு தேர்வு செய்யப்படாமல், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இதனால் இந்திய அணியின் பல முன்னாள் வீரர்கள் தேர்வு குழுவிலுள்ள அரசியலை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதே மாதம் போன வருடம்... தடைக்காலத்தை நினைவுகூர்ந்த ஸ்மித்!