கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல கவுண்டி கிளப்பாக வலம் வருவது க்ளோசெஸ்டர்ஷைர் அணி. சில தினங்களுக்கு முன்பு இந்த அணியின் நட்சத்திர வீரர் ஜார்ஜ் ஹான்கின்ஸ் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து கோவிட்-19 பெருந்தொற்றால் இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கைது செய்யப்பட்ட ஜார்ஜ் ஹான்கின்ஸ் வருகிற ஜூலை மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![க்ளோசெஸ்டர்ஷைர் அணி வீரர் ஜார்ஜ் ஹான்கின்ஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6890801_honkins.jpg)
இதுகுறித்து அணி நிர்வாகம், ”விபத்து ஏற்படுத்தியதாக எங்கள் அணியைச் சேர்ந்த ஒருவர் காவல் துறையினரின் விசாரணைக்கு உட்பட்டுள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட வீரருடன் கிளப் சார்பிலும் முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
23 வயதான ஜார்ஜ் ஹான்கின்ஸ், க்ளோசெஸ்டர்ஷைர் அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் விளையாடிவருகிறர். இந்த அணியில் இந்தியாவின் நட்சத்திர டெஸ்ட் வீரரான புஜாரா, இந்தாண்டு நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்கா:'நான் சச்சினைப் போல் விளையாட நினைக்கிறேன்' - ப்ரித்வி ஷா!