ETV Bharat / sports

இந்தியா vs வங்கதேச டெஸ்ட் போட்டிக்கு சச்சினை எப்படியாது அழைத்துவருவோம் - கங்குலி - இரண்டாவது டெஸ்ட் போட்டி

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெறும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு சச்சினை அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

Ganguly invites sachin for the First historic Day- Night Test Match
author img

By

Published : Nov 1, 2019, 9:18 AM IST

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணி முதன்முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால் இந்தப் போட்டியைக் காண அதிக ரசிகர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டுவருகிறது. அதன்படி இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலையை ரூ. 50 என குறைந்த விலையில் அறிவித்துள்ளது.

மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியைக் காணவருமாறு இந்தியப் பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்ற வங்கதேச பிரதமர், தான் வருவதாக உறுதியளித்துள்ளார். எனினும் இந்திய பிரதமரின் வருகை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாமல் உள்ளது.

இந்தப் போட்டியின்போது மேரி கோம், அபினவ் பிந்த்ரா, பி.வி. சிந்து உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களை கௌரவிக்க உள்ளதாகவும் கங்குலி தெரிவித்திருந்தார். இதனிடையே தற்போது புதிய செய்தியாக இந்தியா வங்கதேசம் இடையே கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும் இப்போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் இந்தப் போட்டியில் மரியாதை செய்யப்படவுள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுக்கும் இப்போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்த கங்குலி அவரை எப்படியாவது அழைத்து வருவோம் என்று கூறினார். கடந்த 2000ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கிய கங்குலியின் அணியில் சச்சின் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் சாதனை படைத்தது இந்தியர்தான்!

Intro:Body:

Ganguly invites sachin for the First historic Day- Night Test Match

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.