ETV Bharat / sports

முரட்டு அடி சேவாக்கிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் - கேப்டன்சி குறித்து கங்குலி - சேவாக்கிடம் கங்குலி கற்ற பாடம்

வீரரின் மனநிலைக்கு ஏற்ப கேப்டன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த நினைத்தபோது உணர்ந்தேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி யூடியூப் சேனலில் உரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Ganguly explains how he learned an important captaincy lesson from stubborn Sehwag
சேவாக் ஆட்டம் குறித்து கங்குலி பேச்சு
author img

By

Published : Apr 4, 2021, 9:33 AM IST

டெல்லி: நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் சேவாக்கின் அதிரடி ஆட்டத்தால் ஒரு கேப்டனாக, தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து அந்தப் போட்டியின் நினைவலைகளிலிருந்து விவரித்துள்ளார் கங்குலி.

இதுதொடர்பாக கங்குலி கூறுகையில், “இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 325 ரன்கள் இலக்கை விரட்ட வேண்டும். நானும், சேவாக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினோம். அப்போது கொஞ்சம் ஏமாற்றமும், அமைதியின்மையும் என் மனதில் இருந்தது. ஆனால் சேவாக் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று என்னிடம் சொன்னார். அதற்கு ஏற்றார் போல் 12 ஓவரில் 82 ரன்கள் என நல்ல தொடக்கம் அமைந்தது.

புதிய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டோம். இனி விக்கெட்டை பறிகொடுக்காமல் சிங்கிள்ல் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சேவாக்கிடம் கூறினேன்.

அப்போது, ரோனி இரானி தனது முதல் ஓவரை வீச வந்தார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டினார் சேவாக். பின்னர் மெல்ல நடந்து சேவாக்கிடம், பவுண்டரி கிடைத்துவிட்டதால் சிங்கிள்களில் கவனம் செலுத்துவோம் என்றேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் அடுத்த பந்திலும் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்திலும் பவுண்டரி அடித்ததை பார்த்து கோபமடைந்தேன். அடுத்து ஐந்தாவது பந்திலும் ஒரு பவுண்டரி என முரட்டுத்தனமாக அடித்தார்.

இதைத்தொடர்ந்து அவரது இயல்பான ஆக்ரோஷ ஆட்டத்தை விளையாடவிடாமல் தடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே ஒவ்வொரு கேப்டனும் தனது அணி வீரரின் மனநிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது அடிப்படியான ஒன்று” என்றார்.

2003ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் சீரிஸ் தொடரை கங்குலி தலைமையிலான அணி கைப்பற்றியது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 325 ரன்களை சேஸ் செய்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா பெற்றது.

இந்தப் போட்டியில் கங்குலி - சேவாக் சிறப்பான தொடக்கம் அளித்தபோதிலும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சச்சின், டிராவிட் ஆகியோர் பெரிய அளவில் சோபிக்காமல் பெவிலியன் திரும்பிய நிலையில், அப்போது இளம் வீரர்களாக இந்திய அணியில் ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாடிய யுவுராஜ் சிங் - முகமது கைஃப் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: இனிமையான நினைவுகளை தந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு நன்றி - கேரி கிறிஸ்டன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.